Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  8 தமிழர்கள் 

பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  8 தமிழர்கள் 

4 ஆடி 2024 வியாழன் 08:33 | பார்வைகள் : 5695


பிரித்தானியாவில்  கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். 

இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது.

பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொர்ந்து கடந்த மே 30 ஆம் திகதி பிரிட்டன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் காண்கின்றனர்.

உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. 

பிரித்தானியாவில்  கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வந்தது.

இந்நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் போது 15 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்