போரின் தீவிரம் - காசாவை விட்டு இடம்பெயரும் மக்கள்
4 ஆடி 2024 வியாழன் 08:45 | பார்வைகள் : 2682
இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர் ஆரம்பித்துள்ளது.
இதில் இருந்து காசாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
பாலஸ்தீன எல்லை பகுதியில் உள்ள ஐநா-வின் OCHA அமைப்பு தலைவர் ஆண்ட்ரியா டி டொமினிகோ காசாவில் சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இதுவரை காசா எல்லையில் ஒவ்வொரு பத்தில் ஒன்பது பேர் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கணிக்கிறோம். நாங்கள் 1.7 மில்லியன் பேர் இடம்பெயர வாய்ப்புள்ளதாக கணித்திருந்தோம்," என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வடக்கில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் வரை சிக்கிக் கொண்டு தெற்கிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.