Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் முதன்முறையாக வாக்களிக்கும் புலம்பெயர்ந்தோர்கள்...

பிரித்தானியாவில் முதன்முறையாக வாக்களிக்கும் புலம்பெயர்ந்தோர்கள்...

4 ஆடி 2024 வியாழன் 08:57 | பார்வைகள் : 3851


பிரித்தானியாவில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகின்றது.

காமன்வெல்த் நாடுகள் குறிப்பாக, முன்னர் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழிருந்த நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரும் பிரித்தானிய தேர்தலில் வாக்களிக்க முடியும்.

இந்நிலையில், அவர்களுடைய வாக்கு யாருக்கு என சிலரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

மற்றொரு நாட்டிலிருந்து வந்த தங்களுக்கு வாக்களிக்க உரிமை அளித்தது தங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளதாக இந்தியாவிலிருந்து வந்துள்ள பால்ராஜ் (27) மற்றும் பங்கஜ் ஆகியோர் தெரிவிக்க, உங்கள் வாக்கு யாருக்கு என்று கேட்டால், பிரித்தானியாவின் இரண்டு முக்கிய கட்சிகளுக்கிடையே பெரிய வித்தியாசம் எதையும் தான் பார்க்கவில்லை என்று கூறும் மலேசியாவிலிருந்து மாணவராக வந்த Teh Wen Sun (33), புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் கட்சிக்கே தான் வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில், புலம்பெயர்தல் ஒரு முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியர்கள், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை பிரித்தானியாவில் அதிகமாகிவிட்டது என்றும், அவர்களால் பிரித்தானியர்களுக்கு மருத்துவசேவை, கல்வி மற்றும் வீடுகள் கிடப்பதில் பிரச்சினை ஏற்படுவதாக கருதுகிறார்கள்.

அதற்கேற்ப, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான ரிஷி சுனக், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவிலிருந்து புலம்பெயர்ந்த Oyinkansola Dirisu (31) என்பவர், தான் லேபர் கட்சிக்கு வாக்களிக்க திட்டமிட்டிருப்பதாகவும், யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் தன்னைப்போல மற்ற மக்கள் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வதை எளிதாக்கவேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்