Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் அடுத்து வரும் அரசாங்கம் இழுபறி நிலையிலேயே அமையும் அபாயம்.

பிரான்சில் அடுத்து வரும் அரசாங்கம் இழுபறி நிலையிலேயே அமையும் அபாயம்.

4 ஆடி 2024 வியாழன் 09:23 | பார்வைகள் : 3553


நாடாளுமன்றத்தில் இருக்கும் 577 ஆசனங்களில் 289 ஆசனங்களை பெற்று ஆட்சியமைக்கும் கட்சியே அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஆட்சியாக அமையும் எனும் நிலையில், நடந்து முடிந்த முதல் சுற்று வாக்களிப்பு தந்திருக்கும் முடிவுகள் எந்த ஒரு கட்சியும் அந்த நிலைக்கு வரும் என்று கூறமுடியாது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்தை அறுதிப் பெரும்பான்மை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற Rassemblement National கட்சியினரும் ஏற்றுக்கொண்டது போல் தெரிகிறது. காரணம் FT1 தொலைக்காட்சியில் கலந்து கொண்ட RN கட்சியின் தலைவர் Jordan bardella "தமது கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டால் நான் பிரதமராக பதவி ஏற்க மாட்டேன், எனவே எங்களை அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு வாக்களியுங்கள்" என மீண்டும் தெரிவித்து இருக்கிறார், அதேபோல் france Inter  வானொலிச் சேவைக்கு வழங்கிய செவ்வியல் RN கட்சி அரசதலைவர் வேட்பாளர் Marine le Pen அவர்கள் "இடதுசாரிகளோ வலதுசாரிகளோ யாராக இருந்தாலும் வாருங்கள் புதிய அரசியலை உருவாக்குவோம்" என அழைப்பு விடுத்திருக்கிறார் இந்த செய்திகள் அவர்கள் பெரும்பான்மையை பெறமாட்டார்கள் என்பதை அவர்கள் வாய் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதே நிலையே இடதுசாரிகளின் நிலைமையும் என அவர்களும் பெரும்பான்மை பெறும் நிலையில் இல்லை இவ்வாறான நிலைமையில் பிரான்சின் அடுத்த நாடாளுமன்ற ஆட்சி அமைப்பு இடம் பெற்றால் சட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலையும், நம்பிக்கை இல்லாத தீர்மானங்களும், ஆட்சி கவிழ்ப்புக்கான முயற்சிகளும், என இழுபறி நிலையிலேயே அமையும் அபாயம் உள்ளது என்று பல முதிர்ந்த அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்