மிகக் குறைந்த இரத்த இருப்புக்களை எதிர்கொண்டுள்ளோம், இரத்த தானம் தாருங்கள். EFS
4 ஆடி 2024 வியாழன் 09:25 | பார்வைகள் : 4151
பிரான்சின் இரத்த வங்கியான 'Établissement Français du sang' நாட்டு மக்களுக்கு ஒரு அவசர வேண்களை விடுத்துள்ளது. கோடைக்கால விடுமுறை நெருங்கிவருகிறது, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது இந்த நிலையில் எங்களிடம் மிகக் குறைவான இரத்தமே கையிருப்பில் உள்ளது, எனவே இரத்ததானம் செய்ய வாருங்கள் என அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலின் தாக்கம், நாடாளுமன்றத் தேர்தலின் பரபரப்பில், வழமையான இரத்ததானம் செய்பவர்களின் தொகை பத்திற்கு நான்கு வீதம் எனும் நிலை பிரான்சில் தோன்றியுள்ளது எனவும் இதனால் இரத்த தானம் செய்யும் நிறுவனங்கள் நன்கொடைகளில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
சாதாரண நாட்களை விடவும் விடுமுறை காலங்களில் அதிக விபத்துக்கள் நடப்பதாலும், ஒலிம்பிக் போட்டிகளின் போது அதிகமான மக்களின் வருகையாலும் மருத்துவ மனைகள் இரத்தம் இருப்பதை மேம்படுத்த வேண்டிய நிலையுள்ளது என தெரிவித்துள்ள 'Établissement Français du sang' அமைப்பு, தனது இணையத்தளத்திலேயே அவசர அழைப்பை விடுத்துள்ளது.