ஆட்சியமைக்கும் முன்னரே 'sénateurs' மேல்ச்சபை உறுப்பினர்கள் Jordan Bardella இன் கருத்துக்கு நிராகரிப்பு.
4 ஆடி 2024 வியாழன் 10:18 | பார்வைகள் : 5288
"நாங்கள் ஆட்சியமைத்தால் எரிபொருள், மின்சாரம் போன்ற எரிசக்தி மீதான வரியை 5.5% சதவீதத்தால் குறைப்போம்" என Rassemblement National (RN) கட்சியின் தலைவர், பிரதமர் வேட்பாளர் Jordan Bardella தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்து வரும் நிலையில், பிரான்சின் சட்டங்களை அங்கிகரிக்கும் அதியுயர் பீடமான 'sénateurs' சபையின் உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.
கடந்த ஆறுமாத காலமாக 140 விசாரணைகளை மேற்கொண்ட 'commission d'enquête' செனட் விசாரணைக் குழு மின்சாரத்தின் அரசு வரியை குறைக்குமாறு அரசுக்கு பணித்துள்ளது. அரச வரியை 5.5% சதவீதத்தால் குறைக்கும் படி பணித்துள்ள 'commission d'enquête' செனட் விசாரணைக் குழு இந்த விலை குறைப்பு யார் யாருக்கு ஏற்றது எனவும் பட்டியல் உள்ளது.
Jordan Bardella கூறுவது போல் விலைக்குறைப்பை பொதுவாக அனைவருக்கும் செய்வதற்கு 'commission d'enquête' செனட் விசாரணைக் குழு மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், Jordan Bardella இன் கருத்தையும் நிராகரித்துள்ளது.
ஒரு வீட்டில் இருப்பவர்களின் அளவுக்கு ஏற்ற வீட்டின் அளவு, மின்சார பாவனைப் பொருட்களின் தேவை, மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வாழ்க்கை முறையை கொண்டவர்களுக்கு மட்டுமே முதன்மைத் தேவைகளின் அடிப்படை நுகர்வுக்கு இந்த விலைக்குறைப்பை செய்யமுடியும் எனவும், commission d'enquête' செனட் விசாரணைக் குழு பணித்துள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் கொண்டுவர இருந்த சட்டத்தினை செனட் சபை நிராகரித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.