சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை தட்டிச்சென்ற கேப்டன் மில்லர்
4 ஆடி 2024 வியாழன் 10:53 | பார்வைகள் : 1992
இந்திய திரையுலகமே கொண்டாடும் மாபெரும் நாயகன் தனுஷ். தமிழில் உச்ச நட்சத்திரமாக வெற்றிக்கொடி நாட்டிய நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு, உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தைத் தொடர்ந்து ஆஹா கல்யாணம் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. பாலிவுட்டில் இரண்டு திரைப்படங்களின் மூலம் மட்டுமே முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த நடிகர் தனுஷ், ஹாலிவுட்டில் தி க்ரே மேன் திரைப்படத்தில் நடித்தார்.
அவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கினார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கேட்பன் மில்லர் திரைப்படம் கடந்த 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அமேசான் பிரைம் தளத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் வௌியானது.
இந்நிலையில், 10-வது லண்டன் தேசிய விருதுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் இந்த விருதை பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.