Paristamil Navigation Paristamil advert login

கைலாசா நாடு எங்கே இருக்கு?: ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

கைலாசா நாடு எங்கே இருக்கு?: ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

4 ஆடி 2024 வியாழன் 12:35 | பார்வைகள் : 725


சாமியார் நித்யானந்தா ஹிந்துக்களுக்கான தனி நாடாக 'கைலாசா நாடு' உருவாக்கியதாக அறிவித்திருந்த நிலையில், அந்த நாடு எங்கிருக்கிறது என ஜூலை 21ல் அறிவிப்பதாக நித்யானந்தா கூறியுள்ளார்.

சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்யானந்தாவே கூறியிருந்தார். அதனை ஹிந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவரே கூறியிருந்தார். தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், அந்நாட்டின் அதிபராக கூறிக்கொள்ளும் நித்யானந்தா அறிவித்தார்.

ஆனால் அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வரும் ஜூலை 21ம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 'கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம்,' என கூறப்பட்டுள்ளது. மேலும், 'கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள்' என்று ஒரு ஆன்லைன் லிங்க்-ம் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் ஒருவழியாக விடை தெரியாத கைலாசா நாட்டின் விலாசம் விரைவில் தெரியவுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்