■ இரண்டாம் சுற்று தேர்தல் - நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியவை..!
4 ஆடி 2024 வியாழன் 14:33 | பார்வைகள் : 5786
வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 7 ஆம் திகதி இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது.. இந்த இரண்டாம் சுற்று தேர்தல் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியவற்றை அலசுகிறது இந்த பதிவு.
இந்த தேர்தலில் 49.3 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற முதலாம் சுற்று வாக்கெடுப்பில் 50% சதவீத வாக்குகளைப் பெற்று 66 வேட்பாளர்கள் நேரடியாக தெரிவாகியுள்ளனர். 577 தொகுதிகளில் மீதியுள்ள 501 ஆசனங்களுக்கான தேர்தலே இடம்பெற உள்ளது.
இந்த 66 தொகுதிகளில் Rassemblement national கட்சி 39 இடங்களையும் NFP கூட்டணி 32 இடங்களையும், ஜனாதிபதி மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி 2 இடங்களையும் கைப்பற்றியிருந்தது.
இரண்டாம் கட்ட தேர்தலில் பெண்கள் ஆண்கள் என மொத்தமாக 1,094 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் இருந்து 501 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இரண்டாவது சுற்றில் அதிக வாக்குகள் பெற்ற நபர் தேர்வு செய்யப்படுவார். வாக்குகள் சமமாக பெறப்பட்டால் போட்டியிட்ட இருவரில் வயது கூடிய நபர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
வாக்குச்சாவடிகள் காலை 8 மணிக்கு திறக்கப்படும். சில நகரங்களில் மாலை 6 மணி வரையும், சில நெருக்கடி நிறைந்த நகரங்களில் இரவு 8 மணிவரையும் வாக்குச் சாவடிகள் திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் தேர்தல் முடிவுகளில் முதற்கட்ட முடிவுகள் அறிவிக்கப்படும்.