28 புதிய ட்ராம்களை கொள்வனவு செய்யும் இல் து பிரான்ஸ் போக்குவரத்து சபை!

5 ஆடி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 6851
இல் து பிரான்ஸ் போக்குவரத்து சபை (Île-de-France Mobilités) புதிதாக 28 ட்ராம்களை கொள்வனவு செய்ய உள்ளது.
T1 வழிச்சேவைகளுக்காக இந்த ட்ராம்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. T1 இற்கான விஸ்தரிப்பு பணிகள் கடந்த ஒன்றரை வருடங்களாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் 89 மில்லியன் யூரோக்கள் செலவில் புதிதான 28 ட்ராம்களை வாங்க உள்ளதாக Île-de-France Mobilités அறிவித்துள்ளது.
இந்த ட்ராம்களை Alstom தயாரிக்க உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள Citadis X05 எனும் வகையைச் சேர்ந்த ட்ராம்களே இதற்காக தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த புதிய விஸ்தரிப்பு பணி Asnières (Hauts-de-Seine) நகரில் இருந்து Noisy-le-Sec (Seine-Saint-Denis) நகர் வரை 18 கிலோமீற்றர் தூரத்துக்கு இடம்பெற்று வருகிறது.