பிரித்தானியாவில் தனிப்பெரும்பான்மையுடன் லேபர் கட்சி வெற்றி
5 ஆடி 2024 வெள்ளி 05:10 | பார்வைகள் : 3373
பிரித்தானியாவில் 14 வருட கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
லேபர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகிறார்.
சற்று முன் வெளியான தகவல்களின்படி, லேபர் கட்சி 333 இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 326 இருக்கைகள் தேவை என்னும் நிலையில், லேபர் கட்சி அதற்கு அதிகமான இருக்கைகளைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.