Paristamil Navigation Paristamil advert login

Rassemblement national (RN) இன் பெரும்பான்மை கனவு கலைந்தது. கருத்து கணிப்பு.

Rassemblement national (RN) இன் பெரும்பான்மை கனவு கலைந்தது. கருத்து கணிப்பு.

5 ஆடி 2024 வெள்ளி 09:05 | பார்வைகள் : 3715


பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது சுற்றிலும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம் என்ற நிலையில் இருந்து Rassemblement national (RN) பெரும்பான்மை என்னும் கனவினை இழந்தது என M6 தொலைக்காட்சி,  RTL வானொலி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 217 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதன் உடனடி விளைவு இது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று LCI தொலைக்காட்சியும் ,Le Figaro பதிதிரிகையும் நடத்திய கருத்துக் கணிப்பில் தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national 210ல் இருந்து 240 ஆசனங்களை வரை பெறுவார்கள் என்றும், Nouveau Front populaire  170ல் இருந்து 200 ஆசனங்கள் வரை பெறுவார்கள் என்றும், ஆழும் கட்சியான Ensemble (Majorité présidentielle) கட்சியினர் 95ல் இருந்து 125 ஆசனங்கள் வரை பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement National ஏற்கனவே Éric Ciotti தலைமையிலான Les République கட்சியுடன் இணைந்தே மேற்குறிப்பிட்ட ஆசனங்களை பெறுவார்கள் என கருத்துக் கணிப்பு தெரிவித்திருக்கும் நிலையில்,  Nouveau Front populaire கட்சி வெற்றியீட்டும் ஏனைய கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பெரும்பான்மை பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்