பிரித்தானியத் தேர்தல்: ஈழத் தமிழ்ப் பெண் உமா குமரன் வெற்றி பெற்றார்
5 ஆடி 2024 வெள்ளி 15:25 | பார்வைகள் : 2501
பிரித்தானியாத் தேர்தலில் ஈழத் தமிழ் பின்ணணியை கொண்ட உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.
ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் அவர் 19 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்தொகுதியில் கிறீன்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர் 7 ஆயிரத்து 511 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த வெற்றிமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பின்னணிகொண்ட பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என உமாகுமரன்தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.
உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும். பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.