Paristamil Navigation Paristamil advert login

ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவரின் தாய் மருத்துவமனையில் அனுமதி

ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவரின் தாய் மருத்துவமனையில் அனுமதி

31 ஆவணி 2023 வியாழன் 09:21 | பார்வைகள் : 6828


ஸ்பெயின் மகளிர் கால்பந்து நட்சத்திரம் ஜென்னி ஹெர்மோசோவை உதட்டில் முத்தமிட்டதாக குறிப்பிட்டு பெரும் கொந்தளிப்பை எதிர்கொண்டு வருகிறார் லூயிஸ் ரூபியேல்ஸ்.

இந்த நிலையில் ஃபிஃபா அமைப்பும் அவரை 90 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து சனிக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் தமது மகனுக்கு எதிரான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக 72 வயதான Angeles Béjar உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

தேவாலயம் ஒன்றில் நுழைந்த Angeles Béjar, அங்கிருந்து வெளியேறவும் உணவருந்தவும் மறுத்துள்ளார்.


உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த Angeles Béjar பத்திரிகையாளர்களை சந்திப்பார் என தகவல் வெளியான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதனிடையே, Angeles Béjar இனி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பில்லை, வயதானவர் என்பதால் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமது மகன் ஒழுக்கமான நபர் எனவும், ஒட்டுமொத்த சமூகவும் அவருக்கு என்ன செய்கிறார்கள் என்பது நியாயமில்லை எனவும் Angeles Béjar தெரிவித்திருந்தார்.

ஸ்பெயின் கால்பந்து சங்கத்தில் இருந்து எந்த காரணத்தாலும் பதவி விலகுவதாக இல்லை என அறிவித்திருந்த லூயிஸ் ரூபியேல்ஸ் தற்போது எங்கிருக்கிறார் என்பது தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்