ஜூலை 14 : பார்வையாளர்கள் இல்லாமல் ஈஃபிள் கோபுரத்தில் வானவேடிக்கை..!!
5 ஆடி 2024 வெள்ளி 17:17 | பார்வைகள் : 5274
இம்முறை ஈஃபிள் கோபுரத்தில் தேசிய நாளின் போது, பார்வையாளர்கள் இல்லாமல் வானவேடிக்கை கொண்டாடப்பட உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக Trocadéro மற்றும் Champ de Mars பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமையினால், அங்கு பெரும் திரளான மக்களை ஒன்றிணைப்பது சாத்தியமற்றது என்பதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வின் போது ஈஃபிள் கோபுரத்தில் பல வண்ண நிறங்களில் வான வேடிக்கைகள் நிகழ்த்துவது அறிந்ததே.
அதனை பார்வையிடுவதற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடும் நிலையில், இம்முறை இந்த தணிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக கொவிட் 19 பரவலின் போதும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.