Paristamil Navigation Paristamil advert login

அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது France 5 - 3 கோல் கணக்கில்.

அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது France 5 - 3 கோல் கணக்கில்.

6 ஆடி 2024 சனி 06:24 | பார்வைகள் : 7287


ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்குகிடைமில் 
ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகள் இவ்வாண்டு 'Euro 24' ஜெர்மனியில் நடந்து வருகிறது, அதில் கால் இறுதிப்போட்டியில் இருந்து அரையிறுதி போட்டிக்கு தெரிவாகும் ஆட்டங்கள் இப்போது நடந்து வருகிறது.

இதில் நேற்று 05/07 பிரான்ஸ் போர்த்துகல் நாடுகளின் அணிகள் மத்திய ஐரோப்பிய நேரம் இரவு ஒன்பது மணிக்கு மோதியது முதல், இரண்டு பகுதி நேரங்களில் இருநாட்டு அணிகளும் எந்தவிதமான கோல்களையும் இறக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது, அதிலும் இரு அணிகளும் மிகுந்த அற்பணிப்போடு விளையாடியதே தவிர மீண்டும் கோல்களை இறக்கவில்லை.

இதனால் 'Penalty' முறைக்கு ஆட்டம் தள்ளப்பட்டது இதில் பிரான்ஸ் அணி 5-3 எனும் கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கியது இதன் மூலம் பிரான்ஸ் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. வரும் செவ்வாய் கிழமை பிரான்சும் ஸ்பெயின் அணிகளும் அரையிறுதி ஆட்டத்தில் மோதவுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்