Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில்  25 பேர் கொண்ட அமைச்சரவை நியமனம்

பிரித்தானியாவில்  25 பேர் கொண்ட அமைச்சரவை நியமனம்

6 ஆடி 2024 சனி 07:41 | பார்வைகள் : 2488


பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியப் பாரம்பரிய முறைக்கு அமைய மன்னர் சாள்ஸ்ஸை சந்தித்து தமது வெற்றியினை அறிவித்தார்.

பெக்கிங்ஹாம் மாளிகையில் மன்னரைச் சந்தித்து விட்டு கெய்ர் ஸ்டார்மர் நேரடியாகப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான இலக்கம் 10 டௌனிங் வீதிக்குச் சென்று தமது கன்னி உரையை நிகழ்த்தினார்.

 பிரித்தானியாவின் துணை பிரதமராக எஞ்சலா ரெய்னர்மற்றும் நீதி செயலாளராக ஷபானா மாஹ்முட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பிரித்தானியாவின் முதலாவது பெண் சான்ஸ்லராக ரேச்சல் ரீவ்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் வெளிவிவகார செயலாளராக டேவிட் லம்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

தொழிலாளர் கட்சி சார்பில் இந்த முறை தேர்தலில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரன் 19,000க்கும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமையும் குறப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்