உலகின் முதல் CNG பைக்கை வெளியிட்ட Bajaj., விலை, அம்சங்கள் இதோ...
6 ஆடி 2024 சனி 08:32 | பார்வைகள் : 1011
இந்திய நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, ‘Freedom 125’ எனப்படும் உலகின் முதல் இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் மோட்டார் சைக்கிளை வெளியிட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ எம்டி ராஜீவ் பஜாஜ் வெள்ளிக்கிழமையன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் புதிய பைக்கை அறிமுகப்படுத்தினார்.
ஆனால் இந்த இரு சக்கர வாகனம் முதலில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும், பின்னர் நாட்டின் பிற மாநில சந்தைகளுக்கு வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராஜீவ் பஜாஜ் கோரிக்கை விடுத்தார்.
Bajaj நிறுவனம் Freedom 125 சிஎன்ஜி பைக்கை மூன்று வகைகளில் கொண்டு வந்துள்ளது.
NG04 Drum, NG04 Drum LED மற்றும் NG04 Disc LED ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கின்றன.
இந்திய எக்ஸ்-ஷோரூம் படி, இந்த பைக்குகளின் விலை ரூ.95,000 முதல் ரூ.1,10,000 வரை இருக்கும்.
இந்த மோட்டார்சைக்கிள்களை நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூம்களிலும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.
Carribean Blue, Pewter Grey/Black, Cyber White, Ebony Black/Grey, Racing Red, Cyber White, Pewter Grey/Yellow மற்றும் Ebony Black/Red.என 7 வண்ணங்களில் கிடைக்கும்.
இந்த பைக்குகளில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோலுக்கான இரண்டு எரிபொருள் டேங்க்கள் உள்ளன.
இவை வெவ்வேறு சுவிட்சுகளைக் கொண்டுள்ளன. எதை ஆன் செய்தாலும் பைக் ஓடும். இரண்டு தொட்டிகளை நிரப்பினால், மொத்தம் 330 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் என்று பஜாஜ் கூறுகிறது.
ஃப்ரீடம் 125 பயன்படுத்துபவர்கள் தங்கள் எரிபொருள் பயன்பாட்டை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று பஜாஜ் கூறுகிறது.
ஒரு கிலோ CNGக்கு 102 கிமீ மைலேஜ். ஒரு முழு தொட்டி (2 கிலோ சிலிண்டர்) சுமார் 200 கி.மீ. பயணிக்கலாம்.
சிஎன்ஜி தீர்ந்துவிட்டால், பைக்கை பெட்ரோலிலும் இயக்க முடியும்.
பைக்கில் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள எரிபொருள் மூலம் 130 கிலோமீட்டருக்கு மேல் செல்லலாம்.
இந்த பைக்கில் 125cc engine, telescopic forks, effective braking system, Round LED headlamp, LCD instrument console, Bluetooth connectivity உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.