Paristamil Navigation Paristamil advert login

தேனீக்களால் நிரம்பி வழிந்த கனேடிய சாலை - வாகன ஓட்டுனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேனீக்களால் நிரம்பி வழிந்த கனேடிய சாலை - வாகன ஓட்டுனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

31 ஆவணி 2023 வியாழன் 09:32 | பார்வைகள் : 6000


கனடாவில் சுமார் 5 மில்லியன் தேனீக்களை கொண்டு சென்ற டிரக்கில் இருந்து தேனீ கிரேட்ஸ் ( Bee Crates)ஒன்ராறியோவில் உள்ள Guelph லைன் சாலையில் விழுந்துள்ளது.

அதனால்  சாலை முழுவதும் தேனீக்களால் நிரம்பி காணப்பட்ட நிலையில் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாருக்கு அதிகாலை 6:15  மணி அளவில்தகவல்  தெரிவிக்கப்பட்டது,

காவலர் ரியான் ஆண்டர்சன், சாலை முழுவதும் தேனீ கூட்டங்கள் நிறைந்து இருந்ததாகவும், காற்றில் தேனீக்கள் பறந்து கொண்டே இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் உடனடியாக தேனீ காப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 6 முதல் 7 தேனீ காப்பாளர்கள் தேனீக்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட தொடங்கினர்.

கிட்டத்தட்ட 3 மணி நேர பணிக்கு பிறகு பெரும்பாலான தேனீக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன. இருப்பினும் சில தேனீக்கள் தேனீ காப்பாளர்களை கொட்டி தீர்த்தன.

இதற்கிடையில் நடைபாதையாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதியை தவிர்க்குமாறும், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் ஜன்னல்களை மூடி விட்டு பாதுகாப்பாக இப்பகுதியை கடக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்