Paristamil Navigation Paristamil advert login

புளோரிடா மாநிலத்தை புரட்டிபோடும் சூறாவளி

புளோரிடா மாநிலத்தை புரட்டிபோடும் சூறாவளி

31 ஆவணி 2023 வியாழன் 09:43 | பார்வைகள் : 10272


கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் சூறாவளியானது புளோரிடா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

இந்த தகவலை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாலில் மின் இணைப்புக்களும் முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்