■ இன்று.. 501 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல்! என்ன சொல்கிறது கருத்துக்கணிப்பு..??!!
7 ஆடி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 5018
இன்று ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இரண்டாம் கட்ட தேர்தல் இடம்பெறுகிறது. 577 தொகுதிகளுக்காக கடந்தவாரம் இடம்பெற்ற முதலாம் கட்ட வாக்கெடுப்பில் 66 தொகுதிகளில் வேட்பாளர்கள் 50% சதவீத வாக்குகளுக்கு அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், இன்று மீதமுள்ள 501 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது.
அறுதிப்பெரும்பான்மையை RN கட்சி பெற்றுக்கொள்ளாது என இறுதிக்கட்டத்தில் வெளியான கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், தற்போது 39 தொகுதிகளை கைப்பற்றியுள்ள அக்கட்சி, இன்றைய தேர்தலில் மேலும் 201 தொடக்கம் 210 வரையான இடங்களை பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பெறுவதற்கு 289 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டு என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்குரிய சந்தர்ப்பம் எந்த கட்சிகளுக்கும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காலை 8 மணிக்கு வாக்குச்சாவடிகள் திறக்கப்படும். அதேபோல் முதல்கட்ட தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும். கடந்தவாரம் பதிவான வாக்குப்பதிவை விட இந்தவாரம் அதிகூடிய வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.