அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கடுமையாக எச்சரிக்கும் டிரம்ப் !
31 ஆவணி 2023 வியாழன் 10:00 | பார்வைகள் : 6122
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை டிரம்ப் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளதுடன் விமர்சித்து இருக்கின்றார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூளை கலங்கிவிட்டது என்றும்,
அவரது செயல்பாடுகளால் மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில்,
ஜோ பைடன் நேர்மை அற்றவராக இருக்கிறார் என்றும் அதுமட்டுமின்றி முட்டாள் மற்றும் திறமை இல்லாதவராகவும் இருக்கிறார் என்றும் சாடினார்.
நாட்டின் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அவரது திட்டங்கள் இருக்கிறது என்றும் அவருக்கு மூளை கலங்கிவிட்டது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் செயல்பாடுகள் காரணமாக மூன்றாம் உலகப் போர் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா மெக்சிகோ எல்லைக்கதவுகள் திறந்ததை அடுத்து டிரம்ப் இந்த கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
அதேசமயம் வெள்ள சேதத்திற்காகத்தான் அமெரிக்க-மெக்சிகோ எல்லை கதவுகள் திறக்கப்பட்டதாகவும் சட்டவிரோதமான வகையில் அமெரிக்காவில் நுழைவது குற்றம் என்பது எப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க அசரசாங்கம் தெரிவித்துள்ளது.