தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள்: சீமான்

7 ஆடி 2024 ஞாயிறு 13:04 | பார்வைகள் : 8118
தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய, பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு. தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. தேசிய கட்சி மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை.
இப்படி ஒரு சூழல்
சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. இப்படி ஒரு சூழல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?. நானும் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரே நோக்கத்தை கொண்டவர்கள். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சி.பி.ஐ., விசாரணை அவசியம் இல்லை. இவ்வாறு சீமான் பேசினார்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1