Paristamil Navigation Paristamil advert login

மிகவும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்த தேர்தல் களம் இன்று.

மிகவும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்த தேர்தல் களம் இன்று.

7 ஆடி 2024 ஞாயிறு 14:58 | பார்வைகள் : 3050


பிரான்சின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் இரண்டாவது சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. 577 ஆசனங்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 76 ஆசனங்களை தவிர்த்து மீதமுள்ள 501 ஆசனங்களுக்கான தேர்தலாக இந்த தேர்தல் அமைத்திருக்கிறது.

இன்று மதியம்வரை 26.63% சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலாவது சுற்றின் போது மதியம்வரை 25.90% வாக்காளர்களே தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தார்கள். 1981ம் ஆண்டிற்கு பின்னர் அதிக வாக்காளர்கள் பங்கு பெறும் தேர்தல் களமாக இது அமைந்திருக்கிறது.

அரசதலைவர் Emmanuel Macron அவர்கள் தனது துணைவியார் Brigitte Macron சகிதம் Pas-de-Calais உள்ள 'Touquet' பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார், அதேபோல் இன்றைய பிரதமர் Gabriel Attal அவர்கள் Hauts-de-Seine பகுதியிலும், முன்னாள் பிரதமர் Edouard Philippe அவர்கள் Havre பகுதியிலும் வாக்களித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்