■ பரிசில் வாக்குப்பதிவு வீழ்ச்சி.!

7 ஆடி 2024 ஞாயிறு 16:49 | பார்வைகள் : 8211
தலைநகர் பரிசில் மாலை 5 மணிவரையான நிலவரத்தின் படி, வாக்குப்பதிவுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 30 ஆம் திகதி இடம்பெற்ற முதலாம் சுற்று வாக்குப்பதிவின் போது மாலை 5 மணி வரை 60.87% வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இன்று ஜூலை 7 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்குப்பதிவின் போது 55.96% சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் எப்போதும் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகும் Seine-Saint-Denis மாவட்டத்தில், இமுறையும் தவறாமல் குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளன. முதலாம் சுற்று தேர்தலில் 47.04% வாக்குகள் பதிவான நிலையில், இன்று 39.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1