Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் முடிவுகள்... உச்சக்கட்ட பாதுகாப்பின் கீழ் தலைநகர் பரிஸ்..!!

தேர்தல் முடிவுகள்... உச்சக்கட்ட பாதுகாப்பின் கீழ் தலைநகர் பரிஸ்..!!

7 ஆடி 2024 ஞாயிறு 17:58 | பார்வைகள் : 16170


இன்னும் சில நிமிடங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில்.. தலைநகர் பரிசில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், உளவுத்துறை வழங்கிய தகவல்களின் படி, நாடு முழுவதும் 49 இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மீது தாக்குதல்கள், பொதுச் சொத்தை சேதம் விளைவித்தல், போக்குவரத்து விதிகளை மீறி செயற்படுதல் போன்ற வன்முறைகள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்லது.

இன்றைய நாளில் நாடு முழுவதும் 30,000 வீரர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். என்றபோதும் வன்முறைகள் பதிவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்