பிரதமர் Gabriel Attal நாளை தனது பதவியை ராஜினாமா செய்வார்.
7 ஆடி 2024 ஞாயிறு 19:41 | பார்வைகள் : 8180
பிரான்சில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆழும் கட்சியான Ensemble (Majorité présidentielle) 164 முதல் 165 ஆசனங்களை பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்துள்ள நிலையில் இன்றைய பிரதமர் Gabriel Attal தான் தனது பதவியை நாளை ராஜினாமா செய்யும் கடிதத்தை அரச தலைவர் Emmanuel Macron அவர்களிடம் கையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
குறித்த ராஜினாமா கடிதத்தை அரசு தலைவர் ஏற்றுக் கொள்ளவாரா? அல்லது தொடர்ந்து சில வாரங்களுக்கு அல்லது சில மாதங்களுக்கு இதே ஆட்சி தொடருமா என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அரசதலைவர் இதுவரை மௌனம் காத்து வருகிறார்.
இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுகள் Nouveau Front Populaire 188 முதல் 215 ஆசனங்கள், ஆழும் கட்சியான Ensemble (Majorité présidentielle) 164 முதல் 169 ஆசனங்கள், தீவிர வலதுசாரி கட்சியின் கூட்டணி Rassemblement National+Les République 135 முதல் 150 ஆசனங்கள் பெற்றுள்ளன.
முடிவுகள் அனைத்தும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருவதினால் மீண்டும் காத்திருக்க வேண்டும் சரியான நிலைப்பாட்டுக்கு.