Paristamil Navigation Paristamil advert login

பிரபல பாலிவுட் நடிகர் ரஜினியுடன் இணைகிறாரா?

 பிரபல பாலிவுட் நடிகர் ரஜினியுடன் இணைகிறாரா?

8 ஆடி 2024 திங்கள் 06:08 | பார்வைகள் : 1771


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் பிரபலம் ‘கூலி’ படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் பான் இந்திய திரைப்படமாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ரன்வீர் சிங் இந்த படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டால் இந்த படம் பான் இந்திய திரைப்படமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி மேலும் சில பாலிவுட் நட்சத்திரங்களும், தெலுங்கு பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்