Paristamil Navigation Paristamil advert login

தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்.உள்துறை அமைச்சகம்

தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்.உள்துறை அமைச்சகம்

8 ஆடி 2024 திங்கள் 06:47 | பார்வைகள் : 8753


பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான நடந்து முடிந்த தேர்தலில் முடிவுகளை உள்துறை அமைச்சு உத்தியோபூர்வமாக வெளியிட்டுள்ளது. Rassemblement national+ les République கட்சியினர் 10 110 090 வாக்குகளை பெற்று 143 ஆசனங்களை தமதாக்கியுள்ளது,  Ensemble (Majorité présidentielle) 6 572 748 வாக்குகளை பெற்று 163 ஆசனங்களை தமதாக்கி உள்ளது, Nouveau Front Populaire 7 414 923 வாக்குகளை பெற்று 182 ஆசனங்களை தமதாக்கி உள்ளது. Les République  மற்றும் வலதுசாரிகள் (RN கட்சியுடன் சேராத) 2 455 269 வாக்குகளை பெற்று 68 ஆசனங்களை தமதாக்கி உள்ளது.

இதில் எந்த ஒரு கட்சியும் அறுதி பெரும்பான்மை பெறாத நிலையில், இன்று பிரதமர் Gabriel Attal அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை அரசு தலைவரிடம் கையளிக்க இருக்கிறார் அதன் பின்னர் அரசு தலைவர் Emmanuel Macron அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வாரா? அல்லது நிராகரிப்பாரா? புதிய அரசாங்கத்தை அமைப்பாரா? அல்லது இதே ஆட்சியை தொடருமா என்ற பல கேள்விகள் இன்று எழுந்துள்ளது. பெரும்பாலும் ஆழும் கட்சியான Ensemble (Majorité présidentielle) கட்சியும் RN கட்சியுடன் சேராத Les République கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கும் நிலையே உள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்