நைஜீரியா நாடு முழுவதும் மின் நிறுத்தம் - அவதிப்படும் மக்கள்
8 ஆடி 2024 திங்கள் 07:23 | பார்வைகள் : 2223
நைஜீரியாவில் நாடு முழுவதும் மின்சார தடையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சமீப காலமாக மின் உற்பத்தி குறைந்து வருகிறது.
மின் உற்பத்தி 4 ஆயிரம் மெகா வாட்டில் இருந்து வெறும் 57 மெகாவாட் ஆக குறைந்தது.
எனவே தென் கிழக்கு மாகாணங்களான அபியா, அனம்ப்ரா, எபோன்யி, எனுகு மற்றும் இமோவில் உள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஏராளமான தொழிற்சாலைகளும் இந்த மின் நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடந்த ஒரு வாரத்தில் இது 4-வது நாடு தழுவிய மின் நிறுத்தம் ஆகும்.
இதுகுறித்து மின்சாரத்துறை மந்திரி அடேபாயோ அடேலாபு கூறுகையில்,
பவர் கிரிட் செயலிழந்ததால் போதுமான மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே அதனை மறு சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக தெரித்துள்ளார்.