Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் கனமழை -  14 பேர் பலி  - 9 பேர் மாயம்

நேபாளத்தில் கனமழை -  14 பேர் பலி  - 9 பேர் மாயம்

8 ஆடி 2024 திங்கள் 07:31 | பார்வைகள் : 6545


இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேபாளத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 9 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்