பிரித்தானியாவில் பயங்கர சம்பவம் - நடுரோட்டில் நடந்த துப்பாக்கி சூடு...

9 ஆடி 2024 செவ்வாய் 08:05 | பார்வைகள் : 6243
பிரித்தானியாவின் வால்சாலில் திங்கட்கிழமை மாலை நடந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் வால்சாலில்(Walsall) நேற்று மாலை (ஜூலை 8 ஆம் திகதி) அதிர்ச்சியளிக்கும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
வால்சாலில்(Walsall) உள்ள வெல் லேனில் (Well Lane) பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து மாலை 5 மணிக்கு சற்று முன்னதாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
துப்பாக்கி சூடு காயங்களுக்கு உள்ளான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
காயமடைந்த மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பொலிஸார் கொலை வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் தகவல்கள் வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1