இன்று முதல் டோஹா - கொழும்பு விமான சேவைகள் அதிகரிப்பு!
10 ஆடி 2024 புதன் 15:44 | பார்வைகள் : 956
கட்டாரின் டோஹாவில் இருந்து கொழும்புக்கான விமான சேவையை இன்று (10) முதல் அதிகரிக்க கட்டார் ஏர்வேஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தினசரி விமான சேவைகள் 5 அல்லது 6 ஆக அதிகரிக்கப்படும் என குறித்த விமான நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
கட்டார் ஏர்வேஸ் உலகளாவிய ரீதியில் சுமார் 170 விமான நிலையங்களுக்கு தமது சேவையை முன்னெடுக்கிறது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அந்த நிறுவனம் வாராந்தம் 42 விமான சேவைகளை முன்னெடுத்து வருகிறது.