Paristamil Navigation Paristamil advert login

எவ்வாறு சார்ஜ் செய்தால் உங்களது போன் நீண்ட ஆயுளுடன் இருக்கும்..? 

எவ்வாறு சார்ஜ் செய்தால் உங்களது போன் நீண்ட ஆயுளுடன் இருக்கும்..? 

11 ஆடி 2024 வியாழன் 08:06 | பார்வைகள் : 1480


பேட்டரியை பாதுகாக்க போனில் எப்படி சார்ஜிங் செய்ய வேண்டும் என்று சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். நாம் மொபைல் பயன்டுத்துகிறோம் என்பதை விட மொபைல் நம்மை பயன்படுத்துகிறது என்று செல்லும் அளவுக்கு இருக்கிறது.

ஆனால், அந்த மொபைல் போனை நாம சரியாக சார்ஜ் செய்யவில்லை என்றால் அதனுடைய ஆயுள் குறையும். அதற்கான சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

எவ்வாறு சார்ஜ் செய்வது?
* ஸ்மார்ட்போனை நாம் சார்ஜ் செய்த பிறகும் அதனை மின்சாரத்துடன் இணைக்கிறோம். அவ்வாறு செய்தால் பேட்டரியின் ஆயுள் குறைவதுடன் போனுக்கும் பாதிப்பு ஏற்படும்.

* உங்களுடைய போன் 20% இருக்கும் போது சார்ஜ் செய்ய வேண்டும். அதேபோல 80 % முதல் 90% இருக்கும் போது அதனை துண்டிக்க வேண்டும்.

* நீங்கள் 0% இருக்கும்போது சார்ஜ் செய்தால் போன் அதிகமாக சூடாகி விடும். அதேபோல 80% மேல் இருக்கும் போது சார்ஜில் வைத்தால் பேட்டரி செயல் திறன் குறை வாய்ப்பு உள்ளது.

* போன் பேட்டரிகள் சேதமடையாமல் இருக்க குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்