Rouen தேவாலய கோபுரத்தில் தீ விபத்து... தீயணைப்பு படையினர் குவிப்பு..!!

11 ஆடி 2024 வியாழன் 12:56 | பார்வைகள் : 12183
Rouen நகர தேவாலயத்தின் (cathédrale de Rouen) கோபுரம் இன்று காலை தீப்பிடித்து எரிந்தது. 120 மீற்றர் உயரம் கொண்ட தேவலயத்தின் கோபுரத்தில் தீ பரவியதை அடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு தீயை அணைக்க போராடினர். நண்பகலுக்கு சற்று முன்னதாக தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 70 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீ பரவலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பரிசில் உள்ள நோர்து-டேம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025