சூடுப்பிடிக்கும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்
11 ஆடி 2024 வியாழன் 13:25 | பார்வைகள் : 1881
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தில் ஆறாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
குறித்த அகழ்வின் போது பார்வையாளராக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அதிகாரி லூடியானா செல்றினி அகிலனும் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்திருந்தார்.
இந்த அகழ்வு பணியின் போது 7 மனித உடல் பாகங்கள் ,சில மனித ஆடைகள் மற்றும் இராணுவத்தால் பாவிக்கப்படும் கம்பி உட்பட சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆடைகளில் பெண்களுக்குரிய உள் ஆடைகள் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் இன்று நடைபெற இருக்கின்றது.
மேலும், அகழ்வு பணிகளை பேராசிரியர் சோமதேவா குழுவினர் மேற்கொண்டனர் அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தடயவியல் பொலிஸாசார் உள்ளிட்ட தரப்பினரும் இந்த ஆய்வுகளில் பங்கேற்றிருந்தனர்.