Paristamil Navigation Paristamil advert login

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

31 ஆவணி 2023 வியாழன் 18:56 | பார்வைகள் : 13002


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.

375 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 42 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் புதிய விலை 417 ரூபாவாகும்.

ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதன் புதிய விலை 359 ரூபாவாகக் காட்டப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய்யின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் புதிய விலை 231 ரூபா எனவும் இலங்கை கனியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்