Paristamil Navigation Paristamil advert login

தேசிய சட்டமன்றத்திற்கு முன் அணிதிரள அழைப்பு விடுத்துள்ளது CGT Cheminots.

தேசிய சட்டமன்றத்திற்கு முன் அணிதிரள அழைப்பு விடுத்துள்ளது CGT Cheminots.

12 ஆடி 2024 வெள்ளி 06:26 | பார்வைகள் : 2591


நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் அதிக ஆசனங்களை (180)  பெற்றுக் கொண்ட Nouveau Front populaire கட்சியினரை இதுவரை ஆட்சியமைக்க அழைக்காமல் அசமந்த போக்கை கையாளும் அரசதலைவரின் செயலை கண்டித்தும், Nouveau Front populaire கட்சியில் இருந்து புதிய பிரதமரை அழைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

வரும் வியாழக்கிழமை ஜூலை 18ம் திகதி தேசிய சட்டமன்றத்திற்கு முன் அணிதிரள CGT தொழில் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஏனைய பெரும் தொழில் சங்கங்களான UNSA அல்லது CFDT போன்ற மற்ற தொழிற்சங்கங்கள் அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அறியமுடிகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையோ அல்லது ஊர்வலங்களையோ நடத்துவது முறையற்ற செயல் என சொல்லப்பட்டாலும். நாட்டின் முக்கியத்துவம் கருதியும் மக்களின் பாதுகாப்பு கருதியும் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசு தலைவர் எதுவும் நடக்காது போல் நடந்து கொள்வதால் தாம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாக CGT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்