34 வயதிலேயே ஓய்வை அறிவித்த ஜேர்மனியின் மிரட்டல் வீரர்! சோகத்தில் ரசிகர்கள்
12 ஆடி 2024 வெள்ளி 08:50 | பார்வைகள் : 892
ஜேர்மனி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நடப்பு யூரோ 2024 தொடரில் ஜேர்மனி அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் காலியிறுதியில் தோல்வியுற்றது.
அதனைத் தொடர்ந்து ஜேர்மனி அணியின் மூத்த வீரர் டோனி குரூஸ் (Tony Kroos) ஓய்வை அறிவித்தார்.
இந்த நிலையில், ஜேர்மனியின் மற்றொரு நட்சத்திர வீரரான தாமஸ் முல்லரும் (Thomas Muller) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2010யில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக அறிமுகமான முல்லர், அதே ஆண்டு நடந்த உலகக்கிண்ணத் தொடரில் 5 கோல்கள் அடித்து மிரட்டினார்.
அதேபோல் 2014ஆம் ஆண்டு ஜேர்மனி அணி உலகக்கிண்ணத்தை வெல்ல காரணமாக அமைந்த முல்லர், அந்த தொடரிலும் 5 கோல்கள் அடித்திருந்தார்.
ஜேர்மனி அணிக்காக 131 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள முல்லர் 45 கோல்கள் அடித்துள்ளார். 34 வயதாகும் தாமஸ் முல்லர் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.