Paristamil Navigation Paristamil advert login

யூரோ கிண்ணம் இறுதிப் போட்டி... ஸ்பெயினுக்கு படையெடுக்கும் இங்கிலாந்து ரசிகர்கள்

யூரோ கிண்ணம் இறுதிப் போட்டி... ஸ்பெயினுக்கு படையெடுக்கும் இங்கிலாந்து ரசிகர்கள்

12 ஆடி 2024 வெள்ளி 08:55 | பார்வைகள் : 578


யூரோ கிண்ணம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து ரசிகர்கள் தற்போது ஸ்பெயின் நாட்டின் பிரபலமான தீவுக்கு படையெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூரோ கிண்ணம் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள ஜேர்மனிக்கு செல்ல முடியாத இங்கிலாந்து ரசிகர்கள் தற்போது ஸ்பெயினில் திரள உள்ளனர். புதன்கிழமை இரவு நடந்த அரையிறுதி ஆட்டத்தில், கடைசி நேரம் Ollie Watkins பதிவு செய்த கோலால் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆனால் பெர்லின் நகருக்கு டிக்கெட் கிடைக்காத சுமார் 50,000 இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர். விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதுடன் EasyJet மற்றும் Ryanair விமானங்களில் வியாழக்கிழமையில் இருந்து ஞாயிறுவரையில் டிக்கெட் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து பெர்லினுக்கு EasyJet விமானத்தில் 918 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மனம் தளராத இங்கிலாந்து ரசிகர்கள் இன்னொரு திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் Benidorm பகுதிக்கு விரைய திட்டமிட்டுள்ளனர். மது அருந்த கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஸ்பெயின் நாட்டில் இந்தமுறை யூரோ கிண்ணம் கால்பந்து இறுதிப் போட்டியை கண்டுகளிக்க உள்ளனர்.

Benidorm பகுதிக்கு EasyJet விமானத்தில் 179 பவுண்டுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனிடையே பெர்லின் நகரில் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும் ஒரு இரவு தங்குவதற்கு 345 பவுண்டுகள் கட்டணமாக வசூலிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சனிக்கிழமை இரவு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் ஹீத்ரோவில் இருந்து பெர்லினுக்கு 782 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்