Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை: அடைப்படி உரிமை மனு தாக்கல்!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை: அடைப்படி உரிமை மனு தாக்கல்!

12 ஆடி 2024 வெள்ளி 10:05 | பார்வைகள் : 1207


அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கும் வரை அரசியலமைப்பு மீறல் என தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, ஒரு வருடத்திற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 70 வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த சட்டத்திருத்தத்தை பொதுவாக்கெடுப்புக்கு அனுப்ப வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்ப்பளித்த போதிலும், அந்தத் திருத்தம் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்