விஜய் சேதுபதியின் அதிரடி முடிவு..!
12 ஆடி 2024 வெள்ளி 10:48 | பார்வைகள் : 994
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படங்கள் தான் அதிக வசூல் செய்து சூப்பர் ஹிட்டாகியது. குறிப்பாக ரஜினி உடன் ’பேட்ட’ விஜய்யுடன் ’மாஸ்டர்’ கமல்ஹாசனுடன் ’விக்ரம்’ மற்றும் ஷாருக்கான் உடன் ‘ஜவான்’ என அவர் வில்லன் கேரக்டரில் நடித்த படங்கள் வசூலிலும் சாதனை செய்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறியிருந்த நிலையில் அவரது 50வது படமான ’மகாராஜா’ மிகப்பெரிய வெற்றி பெற்று 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மீண்டும் விஜய் சேதுபதி ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருக்கும் ‘ஹிட் 3’ என்ற திரைப்படத்தில் ’கேஜிஎப் 2’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
100 கோடி ரூபாய் வசூல் படத்திற்கு பிறகும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க நடிப்பாரா? அல்லது தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.