■ எலிசே மாளிகையில் ஜனாதிபதி மக்ரோன் அவசர சந்திப்பு... முன்னாள் பிரதமர் பங்கேற்பு..!!

12 ஆடி 2024 வெள்ளி 15:46 | பார்வைகள் : 7792
ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் சற்று முன்னர் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மக்ரோன், பிரதமர் கப்ரியல் அத்தால், உள்துறை அமைச்சர் Gérald Darmanin, முன்னாள் பிரதமர் Élisabeth Borne உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பில் பாராளுமன்றத்தில் இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற ஜனாதிபதியின் மறுமலர்ச்சி கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை தாங்குவது யார் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறிய முடிகிறது.
தற்போதைய பிரதமர் கப்ரியல் அத்தாலே அதனை ஏற்று தலைமை தாங்குவார் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்த சந்திப்பு மிகுந்த பரபரப்பு நிறைந்த ஒன்றாக அமைந்தது எனவும், ஜனாதிபதி மக்ரோன் சில காரசார விவாதங்களை மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
5 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025