பரிசில் உள்ள 600 உணவகங்களுக்கு முற்றம் (terrasses) அமைக்க தடை!!

12 ஆடி 2024 வெள்ளி 18:45 | பார்வைகள் : 6722
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாட்களில், பரிசில் உள்ள 600 வரையான உணவகங்களுக்கு முற்றம் (terrasses) அமைக்க தடை விதிக்கப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
ஜூலை 26 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 11 ஆம் திகதிவரையான நாட்களில் இந்த தடை விதிக்கப்படுகிறது. அவை பெரும்பாலும் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் இடங்களுக்கு அருகே உள்ள அல்லது, ஒலிம்பிக் பாதைகளில் உள்ள உணவகங்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, இந்த தடை விதிக்கப்படும் நாட்களுக்கு ஏற்பட்ட கட்டணங்களில் விலக்கு அளிக்கப்படும் என பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
அதேவேளை, இந்த தடை தொடர்பில் எங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படவில்லை என பல உணவ உரிமையாளர்கள் கண்டன குரலை பதிவு செய்துள்ளனர்.