பிரித்தானிய சாலையில் கோர விபத்து - 2 விமானிகள் பலி

13 ஆடி 2024 சனி 05:56 | பார்வைகள் : 7385
பிரித்தானியாவின் செஷயரில் M62 சாலை விபத்தில் இரண்டு ரியானேர் விமானிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் செஷயரில்(Cheshire) உள்ள M62 சாலையில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு ரியானேர் விமானிகள் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
மாட் கிரீன்ஹால் (Matt Greenhalgh, வயது 28), ஜாமி பெர்னாண்டஸ் (Jamie Fernandes, வயது 24) ஆகியோர் லிவர்பூல் ஜான் லெனான் விமான நிலையத்திற்கு டாக்சியில் சென்று கொண்டிருந்தபோது, வியாழக்கிழமை காலை 5:31 மணியளவில் இரு லாரிகளுடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.
டாக்சி ஓட்டுநர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து ஏற்படுத்தியதாகக் கருதப்படும் 61 வயதான லொறி சாரதியை காவல்துறை கைது செய்துள்ளது.
கிரீன்ஹால் கேப்டனாகவும், பெர்னாண்டஸ் ரியானேர் விமான நிறுவனத்தில் மூத்த அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்.
இந்த விபத்து, மேற்கு நோக்கிய பாதையில், செயின்ட் ஹெலன்ஸ் அருகே, 7 மற்றும் 8 ஆகிய ஜங்ஷன்களுக்கு இடையில் நடந்தது.
இரு விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செஷயர் காவல்துறையின் சிறப்பு அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025