Paristamil Navigation Paristamil advert login

ஓய்வுபெற்ற ஜிம்மி ஆண்டர்சனுக்கு வாழ்த்து கூறிய ஜாம்பவான்

ஓய்வுபெற்ற ஜிம்மி ஆண்டர்சனுக்கு வாழ்த்து கூறிய ஜாம்பவான்

13 ஆடி 2024 சனி 08:32 | பார்வைகள் : 530


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிரியாவிடை அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்தின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20யில் ஏற்கனவே ஓய்வுபெற்ற ஆண்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.

2003ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson), தனது 21 ஆண்டு கிரிக்கெட் வாழ்வில் 704 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் மூன்று முறை 10 விக்கெட்டுகளும், 32 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 7/42 ஆகும்.

41 வயதில் ஓய்வு பெற்ற ஆண்டர்சனுக்கு சக அணி வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பிரியாவிடை அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தனது வாழ்த்தினை ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு கூறியுள்ளார். 

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''ஹே ஜிம்மி! அந்த நம்பமுடியாத 22 வருட Spell மூலம் நீங்கள் ரசிகர்களை கவர்ந்துவிட்டீர்கள். எனது சிறிய விருப்பம் நல்லமுறையில் நீங்கள் விடைபெறுவது. உங்களின் அந்த அதிரடி, வேகம், துல்லியம், ஸ்விங் மற்றும் உடற்தகுதியுடன் நீங்கள் பந்துவீசுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி.

உங்கள் விளையாட்டின் மூலம் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான ஸ்பெல் - குடும்பத்துடன் கூடிய நேரத்திற்காக அந்த புதிய காலணிகளை அணிவது மற்றும் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஆற்புதமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்