Samsung அறிமுகப்படுத்திய Galaxy Smart Ring
13 ஆடி 2024 சனி 08:35 | பார்வைகள் : 738
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சம்சுங் (Samsung) Galaxy Smart Ring-கை அறிமுகப்படுத்தியுள்ளது.
தோல் வெப்பநிலை சென்சார் மற்றும் இதய துடிப்பு சென்சார் பொருத்தப்பட்ட இந்த வளையம் IP68 ரேட்டிங்குடன் வருகிறது.
Samsung நிறுவனம் அதன் விலையை 399.99 அமெரிக்க டாலர்களாக நிற்னயித்துள்ளது.
புதன்கிழமை (ஜூலை 10) பாரிஸில் நடைபெற்ற Galaxy Unpacked Event 2024-இல் நிறுவனம் Samsung Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.
இரண்டு ஸ்மார்ட்போன்களும் நோட் அசிஸ்ட், சாட் அசிஸ்ட், நிகழ்நேர மொழி மொழிபெயர்ப்பு, சர்க்கிள் டு சர்ச் போன்ற பல மேம்பட்ட AI அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டன.
இது தவிர, Galaxy Buds 3 மற்றும் Galaxy Ultra Watch ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.
அனைத்து சாதனங்களுக்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இவை ஜூலை 24 முதல் விற்பனைக்கு வரும்.
நிறுவனம் அனைத்து சாதனங்களிலும் 7 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் 7 தலைமுறை OS மேம்படுத்தல் ஆதரவை வழங்குகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட் ரிங் விற்பனை செய்வது குறித்து நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.