Paristamil Navigation Paristamil advert login

 டெல்லி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்

 டெல்லி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்

14 ஆடி 2024 ஞாயிறு 09:05 | பார்வைகள் : 4001


ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார். 

கடந்த 7 சீசன்களாக டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals) அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங்.

இவரது தலைமை பயிற்சியின் கீழ் டெல்லி சிறப்பாக செயல்பட்டது. ஆனாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கிண்ணத்தை வென்றதில்லை.

அத்துடன் கடந்த 3 சீசன்களாக டெல்லி கேபிட்டல்ஸ் Playoff சுற்றுக்கு கூட முன்னேறாததால் விமர்சனங்கள் எழுந்தது.  

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணி நிர்வாகம் இதுதொடர்பாக வெளியிட்ட பதிவில்,

''7 சீசன்களுக்கு பிறகு டெல்லி கேபிட்டல்ஸ் ரிக்கி பாண்டிங்கை விட்டு விலக முடிவு எடுத்துள்ளது. பயிற்சியாளரான அவருடன் இது ஒரு சிறந்த பயணம்! எல்லாவற்றுக்கும் நன்றி'' என கூறி அவரது புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.


அவுஸ்திரேலிய அணிக்கு தலைவராக செயல்பட்டு இருமுறை உலகக்கிண்ணத்தை வென்று தந்தவர் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) என்பது குறிப்பிடத்தக்கது.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்