அணு ஆயுத ஏவுகணைகள் கொண்டு தாக்க புடின் திட்டம்
16 ஆவணி 2024 வெள்ளி 10:04 | பார்வைகள் : 2451
ஐரோப்பாவில் 32 இடங்களை அணு ஆயுத ஏவுகணைகள் கொண்டு தாக்க புடின் குறிவைத்திருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
அவற்றில் மூன்று இடங்கள் பிரித்தானியாவில் உள்ளன என்னும் ரகசிய தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Hull என்னுமிடத்திலுள்ள ஒரு தொழிற்சாலை, Cumbria என்னுமிடத்திலுள்ள ஒரு கப்பல் காட்டும் தளம் மற்றும் எடின்பர்கில் உள்ள ஒரு ரகசிய இடம் ஆகியவற்றை அணு ஏவுகணை கொண்டு தாக்க புடின் திட்டம் வைத்துள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
The Financial Times என்னும் ஊடகத்திடம் ரஷ்யாவின் திட்டம் குறித்த 29 ஆவணங்கள் சிக்கியதைத் தொடர்ந்து இந்த பயங்கர தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடயம் என்னவென்றால், புடினுடைய குறி பிரித்தானியா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் கூட.
ரஷ்யாவின் Murmansk என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களிலிருந்து பிரித்தானியாவையும், Kaliningrad என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களிலிருந்து பிரான்சையும் ஜேர்மனியையும் அணு ஆயுத ஏவுகணைகள் மூலம் தாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், ரொமேனியா, பல்கேரியா, துருக்கி மற்றும் ஜப்பானையும் அணு ஆயுத ஏவுகணைகள் மூலம் தாக்க புடின் திட்டமிட்டுள்ளார்.
நேட்டோ அமைப்பு புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்துவார் என ஏற்கனவே நம்பும் நிலையில், தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் அதை உறுதி செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில் நேட்டோ அமைப்பில் முன் பணிபுரிந்தவரான William Alberque கூறும்போது, புடின் ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான அல்ல, ஆயிரக்கணக்கான இலக்குகளைத் தாக்க திட்டம் வைத்துள்ளார் என்று கூறும் விடயம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைப் பொருத்தவரை, அணு ஆயுதங்கள் என்பவை போரில் வெற்றியைத் தரக்கூடிய ஆயுதங்கள் ஆகும் என்று கூறும் William Alberque, அவர்கள் அவற்றைப் பயன்படுத்த விரும்பும் நிலை ஏற்படப்போகிறது, அதுவும் விரைவில் அவர்கள் அவற்றைப் பயன்படுத்த விரும்புவார்கள் என்கிறார்.