Paristamil Navigation Paristamil advert login

2022 தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. சிறந்த நடிகர், நடிகை யார்?

2022 தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. சிறந்த நடிகர், நடிகை யார்?

16 ஆவணி 2024 வெள்ளி 11:24 | பார்வைகள் : 889


70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்கள் விருதுகளை குவித்துள்ளது. விருதுகள் குறித்த முழு விவரங்கள் இதோ:

சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த சவுண்ட் டிசைன் - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (காந்தாரா)
சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2
சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா
சிறந்த திரைக்கதை - ஆனந்த் ஏகார்ஷி (ஆட்டம் - மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகி - பாம்பே ஜெய்ரஸ்ரீ (சவுதி வெள்ளைக்கா - மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகர் - ஆர்ஜித் சிங் (பிரம்மஸ்திரா - இந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் (மாளிகாபுரம் - மலையாளம்)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்